2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

விருது வழங்கும் விழா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தால்  அகில இலங்கை ரீதியாக கடந்த மாதம் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில்,  முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்றது.

கல்லடியிலுள்ள அதன் தலைமைக் காரியாலயத்தில் இந்த நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தேவரங்சனி பிரான்சிஸ் தலைமையில் இந்த விழா  நடைபெற்றது. 

இதன்போது, மனநலப் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு வைத்திய கலாநிதி ரி.கலைச்செல்வி தலைமையில நடத்தப்பட்ட  பயிற்சியை நிறைவுசெய்தவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கப் பொருளாளர் ஆர்.ரஞ்சிதமூர்த்தி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.சி.ஏ.அசீஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X