2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கிராம அபிவிருத்திச்சங்க திறப்பு விழா

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு கிராம அலுவலகர் பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத் திறப்பு விழா நேற்று புதன்கிழமை (12) நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 10 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில்  இக்கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு கிராம உத்தியோகஸ்தர் கே.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஏ.வினுராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X