2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'மேற்கத்தேய கலாசாரத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடாது'

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மேற்கத்தேய  நாடுகளின் கலாசாரத்தை  பாடாசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடாது என காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு காத்தான்குடி முதலாம் குறிச்சி 167 கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் க.பொ.த. சாதரணதரப் பரீட்சை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான பாராட்டு விழாவை அங்குள்ள கிராம அபிவிருத்திச்சங்கம் நடத்தியது.

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (12) மாலை இவ்விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

'மாணவர்கள் மத்தியில் மேற்கத்தேய  நாடுகளின் சிந்தனை, கலாசாரம் என்பவற்றை ஏற்படுத்தக்கூடாது. சுதந்திரம் என்கின்ற விடயத்தை வைத்துத்துக்கொண்டு ஒழுக்கமில்லாத மாணவ சமூகத்தை நாம் உருவாக்கக்கூடாது. மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம், பண்பாடு என்பன ஏற்படுத்தப்படவேண்டும்.

பாடசாலை ஒன்றின் வளர்ச்சிக்கு பாடசாலை சூழலிலுள்ள பாடசாலை அபிவிருத்திச்சங்கம், கிராம அபிவிருத்திச்சங்கம், என்பன உறுதுணையாகவும் உதவியாகவும் இருக்கவேண்டும். அப்போதே, அந்தப் பாடசாலையின் கல்வியில் வளர்ச்சியையும் உயர்ச்சியையும் காணலாம்' எனக் கூறினார். 

இந்த விழாவில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.இஸ்மாலெவ்வை, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.எசி.எம்.பதுர்தீPன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X