2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் பெண்களுக்கான தொழுகை மண்டபம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 07 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு நகரில் முதல் தடவையாக  பெண்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட தொழுகை மண்டபம் செவ்வாய்க்கிழமை (06) மாலை திறந்துவைக்கப்பட்டது.

பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் இந்த தொழுகை மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகருக்கு பல்வேறு வேலைகளுக்காக வரும் முஸ்லிம் பெண்கள் தமது தொழுகையை உரிய வேளையில்  நிறைவேற்றுவதற்காக தனந்தர்கள் சிலரின் நிதியுதவியுடனும் மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகிகளின் உதவியுடனும் சுமார் 14 இலட்சம் ரூபாய்  செலவில் இந்த தொழுகை மண்டபத்தை நிர்மாணித்ததாக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா ஹம்சா தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர் ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆ பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஸாலிஹ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ், காத்தான்குடி நகரசபை உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X