2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வு

Kanagaraj   / 2015 ஜனவரி 10 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


7ஆவது ஜனாதிபதியாக பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவானதை தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிலும் வெற்றிக்கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு, காத்தான்குடியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்வு, வெள்ளிக்கிழமை (09) இரவு நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

சிறுபான்மை சமூகத்தின் பூரண ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லாட்சியை ஏற்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதுடன் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும் பொறியியலாளருமான எம்.எம்.அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் முபீன், ஐக்கிய தேசியக் கட்சியின் காத்தான்குடி பிரதேச அமைப்பாளர் முஸ்தபா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு, கிரான்குளம் - எம்.எஸ்.எம்.நூர்தீன்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X