2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பெண் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 13 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அஹமட் அனாம், ஜே.எப்.காமிலா பேகம், ஆர்.ஜெயஸ்ரீராம்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தியாவட்டுவான், தாண்டியடி  பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் ஆலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் வினோதா (வயது  18) என்பவர் சம்பவ இடத்தில்  மரணமடைந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மரணமடைந்துள்ள பெண் தனது தாயுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஆலங்குளம் கிராமத்திலிருந்து முச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த  முச்சக்கரவண்டி, மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த லொறிக்கு  இடமளிக்க முற்பட்டபோது,  வீதியோரமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காயமடைந்த இவரது தாய் சின்னய்யா நல்லம்மா (வயது 50) மற்றும் காவத்தமுனையைச் சேர்ந்த முச்சக்கரவண்டிச் சாரதியான  முஹம்மது முஸ்தபா இக்பால் (வயது 30) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் பிரேத  பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X