2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாமாங்கம் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தீ

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 14 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்று செவ்வாய்க்கிழமை (13) மாலை தீப்பிடித்து எரிவடைந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்றபோது  பூட்டப்பட்ட இந்த  வீட்டினுள்ளிருந்து ல புகை வருவதைக் கண்ட அயலவர்கள், தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீயினால்  வீட்டிலிருந்த  பொருட்கள் அனைத்தும்  எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னொழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறினர்.

இந்த தீ விபத்து தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டுவருகின்றனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X