2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

த.தே.கூ.வின் வேண்டுகோளை ஏற்ற தமிழ் மக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்: யோகேஸ்வரன்

Sudharshini   / 2015 ஜனவரி 14 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ந.குகதர்சன்

எங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று சர்வதிகார ஆட்சியை மாற்ற உதவிய எங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கின்றோம். ஆட்சி மாற்றம் எம் தமிழ் இனத்தின் அரசியல் அபிலாசஷகளுடன் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பியல்கள் எல்லாவற்றையும் தீர்க்கும் நிலையை ஏற்படுத்தும் வகையில், தற்போதைய அரசுக்கு இறைவன் விரைவான நல்லெண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன்; தெரிவித்தார்.

தைப்பொங்கலை முன்னிட்டு அவர் புதன்கிழமை(14) வெளியிட்டு இருந்த வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மலர்ந்திருக்கும் 2015ஆம் ஆண்டு எம் தமிழ் இனத்தின் வேதனைகளை தீPர்க்கும் ஆண்டாகவும் எம் மக்கள் சகல துறைகளிலும் முன்னேறி மகிழ்வோடு திகழும் ஆண்டாகவும் அமைய இறைவனை பிரார்த்தித்து தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றேன்.

எம்மக்கள் உணவை உற்பத்தியாக்க உதவும் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் இவ்வேளை, எமது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமை பயணத்துக்காக என்றும் எம்முடன் இருக்கும் எம் தமிழ் உறவுகளுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

இவ்வருடம் உத்தராயண காலம் ஆரம்பிக்கும் தைப்பொங்கல் நன்னாளில், நாம் கேலிக்கை நிகழ்வுகளை தவிர்த்து இறை வழிபாடுகள் மற்றும் துன்புறும் எமது உறவுகளுக்கு இயன்ற உதவிகளை புரிந்தும் அவர்களது முகங்களில் இயன்றவரை இன்ப உணர்வை ஏற்படுத்தும் நன்னாளாக இந்நாளை மாற்றி அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X