2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெவ்வேறு விபத்துக்களில் அறுவர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 15 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை  (14)  இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதால்,   இருவர் காயமடைந்துள்ளனர். கல்லடியிலிருந்து மகிழுருக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது பின்னால் வந்த முச்சக்கரவண்டி மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் சிகிச்சை பெற்று  வீடு திரும்பியதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை,  களுதாவளையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியானது குருக்கள்மடம் வளைவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதி சமிக்ஞையுடன்; மோதியதால், முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன்,  முச்சக்கரவண்டியும்  சேதமடைந்துள்ளது.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி சந்தியில்  இடம்பெற்ற விபத்தில்  மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வேகமாக வந்த முச்சக்கரவண்டி முன்னால் சென்ற கன்டர் ரக வாகனத்துடன்  மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X