2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Thipaan   / 2015 ஜனவரி 15 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தில், கடந்த வார இறுதியிலிருந்து மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாவாக விற்கப்படுகின்றது. அதேவேளை, ஏனைய மலைநாட்டு மரக்கறிகள் ஒரு கிலோகிராமின் விலை, கரட் ரூ.400, பீட்ரூட் ரூ.350, போஞ்சி ரூ.400, கோவா ரூ.300, கத்தரிக்காய் ரூ. 400 ஆக அதிகரித்து காணப்படுகின்றது.

மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி ஆகிய பிரதேச சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.

இந்த விலையேற்றம் காரணமாக மக்கள் சிரமப்படுவதையும் காணமுடிகின்றது.

சமீபத்தில் நாடுபூராகவும் நிலவிய சீரற்ற காலநிலையும் அடைமழை பெருவெள்ளமுமே மரக்கறிகளின் உற்பத்திக்குக் குறைவிற்கும் அதனால் உண்டான விலையேற்றத்திற்கும் காரணம் என்று விவசாயத் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் காலநிலை தற்போது சீரடைந்துள்ளதால் அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் வீழ்ச்சியடையலாம் என விவசாய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X