2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எதிர் கட்சியிலேயே நான் தொடர்ந்தும் இயங்குவேன் - அருண் தம்பிமுத்து

Sudharshini   / 2015 ஜனவரி 15 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

தற்போது எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் தொடர்ந்தும் இயங்குவேன்  என  அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அரச தரப்பில் செயற்பட்வர்கள் தொடர்பில் உருவாகிவரும் சந்தேகங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் புதன்கிழமை (14) அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்த முப்பத்தையாயிரத்திற்கும் மேற்பட்ட நம் தமிழ் உறவுகளுக்கு எமது கட்சியின் சார்பில் ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேசிய ஜனநாயக அரசியலில் இருந்து விடுபட்டிருந்த எமது தமிழ் மக்கள், மீண்டும் தேசிய அரசியலில் பங்கெடுக்க வேண்டும் என்கிற தேவையினாலும் நல்லெண்ணத்தினாலுமே நான் என்னை தேசிய அரசியலில் இணைத்துக் கொண்டு, தமிழ் மக்களுக்கும் தேசிய அரசியலுக்கும் பாலமாக இருந்தேன்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல், ஜனநாயக இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியினை மையமாகக் கொண்ட கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்திருக்கிறது.

கடந்த ஆட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஜனாதிபதி இணைப்பாளராக நான் வகித்த பதவி  ஆட்சி மாற்றத்தின் நிமித்தம் காலாவதியாகியுள்ளதால், 2015.01.09 அன்று காலை 10 மணியோடு சகல ஆவணங்களையும் ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைத்துவிட்டடேன்.

தற்பொழுது எதிர்க்கட்சியாக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே நான் தொடர்ந்தும் இயங்கி எமது மக்களுக்கு என்னால் முடிந்த சேவையினை வழங்குவேன் என்பதனை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு வாக்களித்த எமது மக்களுக்கு மீண்டும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X