Super User / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
- தேவ அச்சுதன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் பூரண விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனையறுப்பான் பிரதேசத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற முறுகல்நிலையை தொடர்ந்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு செவ்வாய்க்கிழமை (12) சென்று பார்வையிட்ட அவர், இன்று புதன்கிழமை (13) காலை பனையறுப்பான் பிரதேசத்துக்கு சென்று சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்துகொண்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
நேற்று இரவு சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்வோரை கைதுசெய்யவென சென்ற பொலிஸாருக்கும் அப்பகுதியில் உள்ள சிலருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு இறுதியில் அது துப்பாக்கி பிரயோகத்தில் முடிந்துள்ளது.
சட்டத்தை பொலிஸார் கையில் எடுத்து பொதுமக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. பொலிஸார் எழுந்தமானமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளமுடியாது.
குறித்த பகுதியில் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரும் பொலிஸாரால் தாக்கப்பட்டு குறித்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவ்வாறு தொடர்ச்சியான பிரச்சினைகளைக்கொண்ட இப் பிரதேசத்தில் பொலிஸார் நிதானமான முறையில் தமது பணிகளை முன்னெடுத்திருக்கவேண்டும்.
ஆனால் அவ்வாறு அல்லாமல் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவமானது கண்டனத்துக்குரியதுடன் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதவண்ணம் பொலிஸ் உயர் அதிகாரிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும்.
அத்துடன் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தி துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸார் மீது நடவடிக்கையெடுத்து தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago