2025 மே 19, திங்கட்கிழமை

தென்னந்தோட்டத்தில் யானைகள் அட்டகாசம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவின்   காவத்தமுனை கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோட்டத்தினுள்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் உட்புகுந்த இரண்டு யானைகள், அத்தோட்டத்திலிருந்த 30 தென்னங்கன்றுகளையும் வாழை மரங்களையும் நாசப்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாக இந்தப் பகுதியில் யானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுவதாகவும் இரவு வேளைகளில் தாங்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்தக் கிராமத்துக்கு அருகிலுள்ள  மூக்கர்ரகல், சூடுபத்தினசேனை, மீயான்குளம் போன்ற காட்டுப்பகுதிகளிலிருந்து யானைகள் வருவதாகவும் பொதுமக்கள்  கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X