2025 மே 19, திங்கட்கிழமை

'தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தால் சட்டநடவடிக்கை'

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட வாவிகளில் தடை செய்யப்பட்ட வலைகளைப்  பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கெதிராகவும் அவ்வாறான  வலைகளை விற்பனை செய்வோருக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் றுக்ஷான் சி குறூஸ் தெரிவித்தார்.

இதனடிப்படையில், மட்டக்களப்பு சொறுவாமுனை வாவியில் அண்மையில் மீன்பிடிப்பதற்கெனப் பயன்படுத்தப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மூன்று வாவி தோணிகளை கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட வாவிகளில்; சில மீனவர்கள் குறுகிய நேரத்தில் இலாபத்தை ஈட்டும் நோக்குடன் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதனால் பல மீன் இனங்கள் அருகிவரும் அதேவேளை, அனுமதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோரும் பாதிப்புக்குள்ளாகுகின்றனர்.

எனவே, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோருக்கெதிராகவும் அவ்வாறான வலைகளை விற்பனை செய்வோருக்கெதிராகவும் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X