2025 மே 19, திங்கட்கிழமை

வாழைச்சேனையில் காட்டுயானைகள்

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள அல்மஜிமா கிழக்கு மீள் குடியேற்ற கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள், பொது மக்களை அச்சுறுத்தியதுடன் தோட்டப் பயிர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட  தென்னை மரங்களையும் துவாம்சம் செய்து விட்டுச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இரவு வேளைகளில் இப்பிரதேசத்தில் காட்டு யானைகள் ஊடுருவதனால் நிம்மதியாக தூங்கமுடியாமல் உள்ளதாகவும் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் நிலமை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து யானைகளை காட்டுப்பகுதிக்குள் துரத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X