2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடியில் விழிப்புணர்வு பேரணி

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அஞ்சல் சேவை தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை (28) காத்தான்குடியில் நடைபெற்றது.

காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட  இந்த விழிப்புணர்வு பேரணி, புதிய காத்தான்குடி மற்றும் காத்தான்குடி ஊர் வீதி வழியாக சென்று மீண்டும் காத்தான்குடி அஞ்சல் அலுவலகத்தை சென்றடைந்தது.

இந்த விழிப்புனர்வு பேரணியில் பிரதி அஞ்சல் மா அதிபர் எஸ்.விவேகானந்தலிங்கம், மட்டக்களப்பு தபால் அத்தியட்சகர் ஏ.ஜெகன், காத்தான்குடி அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரி மசாகீம் மரைக்கார் மற்றும் பலர்; கலந்து கொண்டனர்.

இதன்போது, அஞ்சல் அலுவலகங்களின் சேவை தொடர்பான விளக்கங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்படத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X