2025 மே 19, திங்கட்கிழமை

அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியக் கூட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 29 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

வரவு -செலவுத்திட்டத்தில்  கொண்டுவரப்படும் நலத்திட்டங்களில் தமது நிலைமை தொடர்பிலும்  கவனம் செலுத்துவதற்கு அரசியல்வாதிகள் தூண்டவேண்டும் என மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓய்வூதியம் பெறுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலத்தில் சிறந்த முறையில் இந்த நாட்டுக்காக சேவையாற்றிய அரசாங்க அதிகாரிகள் ஓய்வுபெறும்போது, அவர்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓய்வூதியம் பெறுவோரின் அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் கூட்டம்,  நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில்,   ஓய்வூதியர்களின்  பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டதுடன்,  அவர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

குறிப்பாக,  கடந்த வரவு -செலவுத்திட்டத்தின்போது, ஓய்வூதியர்களுக்கு கொண்டுவரப்பட்ட திட்டங்கள்,  அதனை நடைமுறைப்படுத்துவதிலுள்ள தாமதம் தொடர்பில் ஆராயப்பட்டன. அத்துடன்,  ஒவ்வொரு ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறியப்பட்டதுடன், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மண்முனை வடக்கு அரச சேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் மு.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட அரசசேவை ஓய்வூதிய நம்பிக்கை நிதியத்தின் தலைவர் எஸ்.சுப்ரமணியம், மண்முனை வடக்கு ஓய்வூதிய சங்கத்தின் செயலாளர் எம்.கந்தசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஓய்வூதியம் பெறும் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  பொன். செல்வராசா,

'கடந்த காலத்தில் அரசாங்க வேலைவாய்ப்புகளை பெறுவதில் தமிழர்கள்; பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியிருந்தனர். கடந்த காலத்தில் நியமனங்கள் வழங்கப்படும்போது, தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தனர். இதில்  தமிழ் மக்கள் புறக்கணிப்பட்டபோதெல்லாம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இலங்கையில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் இன விகிதாசாரத்தில் நியமனங்களை வழங்கும் மாகாணமாக கிழக்கு மாகாணசபை மட்டுமே உள்ளது. கிழக்கு மாகாணசபை மூலம் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நியமனங்களில் பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டன. அவற்றுக்கு  எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.

அதற்கு பல உதாரணங்களை நாங்கள் சொல்லலாம். நிர்வாக சேவை பரீட்சையில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுத்தோம். ஆனால்,  அரசாங்கத்துடன் இணைந்திருந்த தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இழைக்கப்பட்டபோது  மௌனிகளாக இருந்தனர்.

மேலும், தமிழ்ப் பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்கள் சரியாக இயங்குவதில்லை. அதிகாரம் பெற்ற அதிகாரிகளை நியமிக்கும்போது,  அவர்கள் அங்குள்ள சொத்துகளை அழிக்கும் பணிகளை மட்டுமே செய்கின்றன.

எமது ஊழியர்கள் ஓய்வுநிலை அடையும்போது,  குறைந்த ஓய்வூதியத்தை  பெறுகின்றனர். இதற்கு காரணம் கடந்த காலத்தில் எமது சமூகத்தில் உரிய தகைமைக்கு தொழில் பெற்றுக்கொள்ளாமை  காரணமாகும். அதிகமான தகைமையிலிருந்தும் உரிய தொழிலை பெற்றுக்கொள்ளாமையே இதற்கு காரணமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X