Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2015 மார்ச் 29 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கல்லடி வேலூர் சக்தி வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.
இந்துக் குருமார்களினால், வேலூர் ஸ்ரீ பத்திகாளியம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு இந்து சமய தர்மத்தைப் பற்றி போதிக்கும் நிகழ்வின் போதே குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிவஸ்ரீ ரி. சிவகுமாரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், குருமார்களினால் இந்து மதத்தின் விழுமியங்கள் பற்றி கருத்துரைகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள நலன் விரும்பிகளினால் வழங்கப்படும் பாடசாலை உபகரணங்கள் எல்லா அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கும் படிப்படியாக வழங்கப்படும் என ஒன்றிய தலைவர் தெரிவித்தார்.
அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாளா ஜீ. சுரேந்திரன், ஆசிரியர்கள் மற்றும் குருமார்கள் கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
35 minute ago
50 minute ago