2025 மே 19, திங்கட்கிழமை

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி

Sudharshini   / 2015 மார்ச் 29 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான்டான் ஓசானம் பாடசாலையில் கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின்; விளையாட்டு போட்டி நிகழ்வு இன்று (29) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றதுடன் அவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் இடம்பெற்றது.

பாடசாலையின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கான நிகழ்வுகளும் நடைபெற்றன. மேலும் வெற்றிபெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டன.

ஓசானம் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி அமிர்தராணி தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு நிகழ்வில், மட்டக்களப்பு நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் நன்னடத்தை பொறுப்பதிகாரி மா.வரதராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X