2025 மே 19, திங்கட்கிழமை

சிறுவர்களுக்கான நட்புறவு இல்லம்

Thipaan   / 2015 மார்ச் 29 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட திகிலிவெட்டை கிராமசேவகர் பிரிவிலுள்ள சிறுவர்களுக்கான சிறுவர் நட்புறவு இல்லம், பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உதவியாளர் ஏ.ஆர்.எம். றுசைட்டின் தலைமையில் வெள்ளிக்கிழமை (27)  திறந்துவைக்கப்பட்டது.

சிறுவர்களின் ஆளுமை விருத்தி மற்றும் புறசெயற்பாட்டினை மேம்படுத்தும் நோக்கிலேயே இவ் இல்லம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில்  கோறளைப்பற்று தெற்கு பிரதேசசெயலாளர் கே.தனபாலசுந்தரம் கலந்துகொண்டு, சிறுவர் நட்புறவு இல்லத்தைத் திறந்துவைத்ததுடன் சிறுவர்; கழக உறுப்பினர்களிடம்
இசைகருவிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை கையளித்ததார்.

மேற்படி சிறுவர் நட்புறவு இல்லத்தை அமைப்பதுக்கான நிதி, தேசிய நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகஸ்தர்கள் கிராம உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X