Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 30 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் பெண்கள் ஒரு பக்க ஆசனங்களில் அமர்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சல்மா ஹம்சா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போக்குவரத்து பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக்கிடமே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் திங்கட்கிழமை (30) தெரிவித்த சல்மா ஹம்சா,
'இலங்கையில் உள்ள பஸ் வண்டிகளில் பெண்கள் ஒரு பக்க ஆசனங்களில்; அமர்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.
ஆண்களும் பெண்களும் ஒன்றாக அமர்ந்திருந்து பஸ் வண்டிகளில் பயணம் செய்வதால், பல்வேறு அசௌகரியங்களை பெண்கள் எதிர்நோக்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் இடம்பெறுவதற்கான சந்தர்ப்பங்களுக்கும் வாய்ப்புண்டு.
பெண்கள் அச்சமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதற்கும் பஸ் வண்டிகளில் பெண்கள் பயணிப்பதற்கு இந்த நடைமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்.
உலகில் பல நாடுகளில் பெண்களுக்கு பஸ் வண்டிகளில் முன்பக்கம் அல்லது தனியான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனைக் கருத்திற்கொண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் பெண்களுக்கு ஒரு பக்கமான தனியான ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர், இது தொடர்பாக போக்குவரத்து அமைச்சரிடம் கலந்துரையாடுவதாகக் கூறியுள்ளார்;' என இவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
51 minute ago