Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 30 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
நோயாளி இல்லாத வைத்தியரும் கட்டடம் கட்டாத மேசனும் தளபாடங்கள் செய்யாத தச்சனும் இல்லை. ஆனால், பாடம் கற்பிக்காத ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என்ற உண்மையை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.ரி.எம்.நிசாம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்டத்தில் நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் மற்றும் வீதி போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு புனித தெரேசா பாடசாலையில் நடைபெற்றது. இதன்போNது அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மாணவர்களிடம் அறிவும் ஆற்றலும் நிறைந்து காணப்படுகின்றது. அது வெளிக்கொண்டுவரப்படவில்லை என்பது இப்போதிருக்கின்ற மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. கற்பித்தல் செயற்பாடானது இவ்வாறான செய்து காட்டல் முறை மூலம் சிறப்பானதொரு நிலையை அடையும். மனதில் நிலைத்து நிற்கின்ற நிலையை அடையும் என்பதற்கு அந்த கண்காட்சியும் நாடகமும் சிறந்த உதாரணமாகும். இது ஆசிரியர்களுக்குரிய முக்கிய செய்தியாக இருக்கின்றது.
கற்பித்தல் நடைமுறை மாணவர்களின் மனங்களை சென்றடையக்கூடியதாக அவர்களின் மனதில் நிலைத்து நிற்கக்கூடியதான வழிமுறைகளை கொண்டிருக்கவேண்டும் என்பது மிக முக்கிய விடயமாகும். கிழக்க மாகாணத்தின் ஆசிரியர்கள் மிகச் சிறந்த மாணவர்களை கொண்டிருக்கின்றார்கள். இறைவனால் அந்த வரம் அளிக்கப்பட்டிருக்கின்றது என்பதை புரிந்துகொள்ளக்கூடிய சூழல் இருக்கின்றது.
ஆசிரியர்களும் அதிபர்களும் அதிகாரிகளும் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலனுக்காக ஒன்றுசேர்ந்து எங்களுக்குள் இருக்கின்ற பேதங்களை மறந்து எங்களுக்குள் இருக்கின்ற திறமைகளை மாணவர்களின் திறமைகளாக மாற்றுவதற்குரிய வழிமுறைகளை கண்டறிந்து செயலாற்றவேண்டிய கட்டாயத்தேவை இக்காலகட்டத்தில் எழுந்திருக்கின்றது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
36 minute ago