2025 மே 19, திங்கட்கிழமை

39 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா

2014ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை வெளியாகியுள்ள நிலையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 15 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.ஏ.எம்.பதுர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய தேசியப் பாடசாலையிலிருந்து 9 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.  காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் காத்தான்குடி அல் ஹிறா வித்தியாலயத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தைச் சேர்ந்த ஒரு மாணவி 9 பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்றுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.சி.ஏ.எம்.பதுர்தீன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையைச் சேர்ந்த 24 மாணவர்கள் 09 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளனர். மேலும், இப்பாடசாலையைச் சேர்ந்த   எட்டுப் பாடங்களில் எட்டுப் பேர் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், ஏழு பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஏ சித்திகளைப்பெற்ற பாடசாலையாக வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை சாதனை படைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X