Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு மாகாணசபையின் தனது பிரதி தவிசாளர் பதவியை மாகாண முதலமைச்சர் பணத்தின் மூலம் பறித்துள்ளதாக மாகாணசபையின் முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபை அமர்வு செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது. இதன் பின்னர், ஏறாவூரிலுள்ள அவரது அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர் 'ஏழை மக்களுக்காக சேவையாற்றிக்கொண்டிருந்த எனது பிரதி தவிசாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாகாணசபை உறுப்பினர் என்ற பதவிக்கான இறப்பர் முத்திரை இருக்கும்வரை, ஏழை மக்களுக்காக நான் சேவையாற்றுவேன்.
ஏறாவூரிலுள்ள ஏழை மக்களின் குடிசைகளை புகைப்படங்கள் எடுத்து, அவர்களின் வறுமை நிலையை அரேபிய தனவந்தர்களுக்கு காட்டி, அவர்களிடமிருந்து பெற்ற பணத்தை மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கி, எனது பிரதி தவிசாளர் பதவியை பறிப்பதற்கும் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து அதில் வெற்றியடைவதிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார்.
ஏழை மக்களுக்கு உதவுவதற்காக திட்ட அறிக்கை தயாரித்துள்ளேன் என்று அடிக்கடி கூறி காலத்தை கடத்தாமல், ஏழை மக்களுக்கான தனது சேவையை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்யவேண்டும்.
எனது அரசியல் நடவடிக்கை தொடர்பிலும் முதலமைச்சர் செய்த இந்த செயற்பாடு தொடர்பிலும் கிழக்கு மாகாணசபையின் செவ்வாய்க்கிழமை (31) அமர்வில் நான் எடுத்துக்கூறி ஆற்றிய உரையை அவதானித்த மாகாணசபையின் பல உறுப்பினர்கள் கண்ணீர் மல்கினர். என்னை தனியே சந்தித்து கவலை தெரிவித்தனர்.
பிழையான அவதூறை என் மீது கூறி, எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து அதில் வெற்றி கண்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரின் இந்த செயற்பாடு மன்னிக்க முடியாது ஆகும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
29 minute ago