2025 மே 19, திங்கட்கிழமை

'தற்காலிகமாக பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம் வேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் தற்காலிகமாக தொழில் புரிபவர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்று  தழிம் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தழிம் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்கம் புதன்கிழமை  (1.4) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

'உள்ளூராட்சி திணைக்களம், வீதி அபிவிருத்தி திணைக்களம், கல்வித் திணைக்களம், சுகாதாரத் திணைக்களம் உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்களில் சமையாசமய அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் தொண்டர் அடிப்படையிலும் சேவை புரியும் சிற்றூழியர்கள் மற்றும் துறைசார் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படவேண்டும்.

கடந்த காலத்தில் யுத்த அனர்த்தங்களினால் போதிய கல்வித் தகைமைகளை பூர்த்திசெய்யாத சிலரும் மற்றும் அரச சேவைக்கான வயது எல்லை தாண்டிய சிலரும் அடங்கலாக பலர் நிரந்தர நியமனப்பட்டியலுக்குள்  உள்வாங்கப்படவில்லை. மிக நீண்டகாலமாக குறித்த திணைக்களங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் ஆளணித் தேவைகளை பூர்த்திசெய்த இவர்கள்,  இன்று நடுத்தெருவில் நிற்கும் நிலை தோன்றியுள்ளது.

பல திணைக்களங்களில் நிரந்தர நியமனங்கள் அண்மைக்காலமாக வழங்கப்படுகின்றது. மேலும்,  குறிப்பிட்ட சிலர் உள்வாங்கப்படாமை மனிதாபிமானமற்ற செயல் என சுட்டிக்காட்டியதுடன்,  வாழைச்சேனை காகித ஆலை  ஊழியர்களின் சுமார் 5 மாதச் சம்பள நிலுவை வழங்கப்படவில்லை என்று கூறி அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
இவர்களின் கோரிக்கையை  ஏற்று நிலுவைச் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்; கிழக்கு மாகாணசபை வைத்தியசாலைகளில் பணிபுரியும் சிற்றூழியர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு 60 மணித்தியாலயங்களிலிருந்து 40 மணித்தியாலங்களாக குறைக்கப்பட்டது நியாயமற்றது.

தேசிய வைத்தியசாலைகளில் சிற்றூழியர்களுக்கு சுமார் 120 மேலதிக மணி நேரக் கொடுப்பனவு வழங்கப்படும்போதும் கிழக்கு மாகாணத்தில் அதேயளவான வேலைகளை செய்கின்ற சிற்றூழியர்களுக்கு 60 தொடக்கம் 90 மணித்தியாலங்களாவது வழங்கப்படவேண்டும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற்சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X