2025 மே 19, திங்கட்கிழமை

சாரணர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட  முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்ணர் வித்தியாலயத்தில் நீண்ட காலத்துக்குபின் முதலாவது தடவையாக பாடசாலை சாரணர் படையை உருவாக்கி அவர்களுக்கான அங்கத்துவச் சின்னம் சூட்டும் நிகழ்வு புதன்கிழமை (01) பாடசாலையின் அதிபர் எஸ். சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இப்பாடசாலையில் கடந்த பல காலமாக பல்வேறுபட்ட காரணங்களின் நிமிர்த்தம் பாடசாலைக்கான சாரண படையணி இயங்காமை காரணமாக மீண்டும் பாடசாலையின் பல்வேறுபட்ட தேவைகளையும் சாரணர் படையணியின் முக்கியத்துவம் குறித்தும் மீண்டும் இந்த புதிய சாரணர் அணியை ஆரம்பித்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலையின் விளையாட்டுப் போட்டியொன்றில் மாணவர்களின் பல்வேறுபட்ட பாதுகாப்பு தொடர்பாகவும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் பாடசாலையில் நடைபெறும் ஏனைய விழாக்களுக்கும் சாரணர் அணியின் தேவை அதிகமாக காணப்படுகின்றது.

கடந்த காலங்களிலே பாடசாலையை அண்மித்த ஆலயங்களில் நடைபெறும் பாராம்பரிய விழாக்களுக்கு சாரணர் ஒத்துழைப்பை ஆலயங்கள் அனுகியிருந்த வேளையில் பாடசாலையில் சாரணர் படையணி ஒன்று இல்லாமையினால் அவ்வாறான செயற்பாடுகளுக்கு தேவைப்படும் நிமிர்த்தமாகவும் மாணவர்கள் பாடசாலை சாரணர் படையணியில் இணைந்து நல்தொரு நற்பண்பு மற்றும் ஏனைய மாணவர்களை விட நல்தொரு நன்னடத்தையுடையவான மாற்றுவதற்கும் கல்வி செயற்பாடுகளுக்கு சாரணர் அணியில் அங்கம் வகிக்கும் ஒரு சாரணர் என்றவகையில் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை கருத்தில் கொண்டும் மீண்டும் இப்பாடசாலையில் சாரணர்கள் உருவாக வேண்டும் என்ற அடிப்படையில்  உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார்.

சாரணர்களுக்கு அங்கத்துவச் சின்னம் சூட்டும் நிகழ்வுக்கு கல்குடா கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ரி.ரவி, மாவட்ட சாரண ஆணையாளர் இ.பி.ஆனந்தராஜா, உதவி மாவட்ட சாரண ஆணையாளர் எ.ஜெயஜீவன் (கல்குடா) சாரண மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இப்பாடசாலையின் சாரண ஆசிரிய தலைவர் கு.பாஸ்கரன் தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டு சாரணர் அணி அங்கத்தவர்களுக்கான அங்கத்துவச்சின்னம் சூட்டுதல், ஸ்காவ் அணிவித்தல், சத்தியப்பிரமாணம் எடுத்தல், ஆசீர்வாதம் பெறுதல் போன்ற நிகழ்வுகளும் இதன்போது நேர்த்தியான முறையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X