2025 மே 19, திங்கட்கிழமை

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் போராட்டம் நிறைவு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் வியாழக்கிழமை (02) வழங்கப்பட்டதை தொடர்ந்து, எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் கைவிட்டுள்ளனர்.

கடந்த  ஐந்து மாதங்களாக வழங்கப்படாமலிருந்த சம்பளத்தை வழங்குமாறு கோரி  வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் 16 நாட்களாக எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில், கைத்தொழில்துறை அமைச்சின் செயலாளருடன் காகித ஆலையின் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஆலையின் உயர் அதிகாரிகளும்  புதன்கிழமை (01) பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.  

இந்த பேச்சுவார்த்தையின்போது, 2015ஆம் ஆண்டில் வழங்கப்படாதிருந்த ஜனவரி, பெப்ரவரி, மார்ச் ஆகிய  மூன்று மாதங்களுக்கான   சம்பள நிலுவையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியதுடன்,  2014ஆம் ஆண்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள நிலுவையை  ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில்  அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இந்த  உத்தரவாதத்துக்கு  தொழிற்சங்க தலைவர்கள்  இணங்கியதுக்கு அமைய  இந்த எதிர்ப்பு நடவடிக்கை கைவிடப்பட்டதாக காகித ஆலையின் தொழிற்சங்க  தலைவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X