Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மாமாங்கம் பிரதேசத்தின் நான்காம் குறுக்கு வீதி, கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்க உள்வாங்கப்பட்டபோது அவை அதிகாரிகளினால் தடுத்துநிறுத்தப்பட்டமையை கண்டித்தும் அவ்வீதியை புனரமைக்கக் கோரியும் நேற்று வியாழக்கிழமை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மோசமாக காணப்படுகின்ற இவ்வீதி தொடர்பில் கடந்தகாலத்தில் உரிய தரப்பினரின் கவனத்துக்கு பல தடவைகள் கொண்டு செல்லப்பட்டபோதிலும், எதுவித நடவடிக்கையும் முன்டுக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த மாதம் 19ஆம் திகதி மாமாங்க பிரதேசத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் இணைந்து கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், மாமாங்கம் நான்காம் குறுக்கு வீதியை புனரமைக்க தீர்மானம் எடுத்தது.
இருந்தபோதிலும், பிரதேச செயலகத்தில் உள்ள கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்துக்குள்; இந்த வீதி உள்வாங்கப்படாமல், அது அழிக்கப்பட்டு வேறு ஒரு வீதி சேர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. தமது பிரச்சினை தொடர்பில் கூறியபோது அதை கவனத்திற்கொள்ளாமல் தம்மை புறக்கணித்ததுள்ளதாக மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் வி.புஸ்பநாதன் தெரிவித்தார்.
மோசமாக காணப்படுகின்ற இந்த வீதியால் மழை காலத்தில் பயணிக்கமுடியாதுள்ளது. எனவே, கிராமத்துக்கு ஒரு திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட இந்த வீதியை புனரமைப்பதை தடுத்தி நிறுத்தினால் பிரதேச செயலகம் முன்பாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த விடயம் தொடர்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் வி.தவராஜாவிடம் கேட்டபோது, மாமாங்கம் 4ஆம் குறுக்கு வீதி ஒரு சிலரால் தெரிவுசெய்யப்பட்டதாகவும் மாமாங்க பிரதேச மக்கள் தெரிவுசெய்த திட்டத்துக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், அடுத்த திட்டத்தில் மாமாங்கம் 4ஆம் குறுக்கு வீதி உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
7 hours ago
7 hours ago
9 hours ago