2025 மே 19, திங்கட்கிழமை

கிழக்கு மாகாணத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க திட்டம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்கு மாகாணத்தில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத் துறைகளில் வெளிநாட்டு தொழிலதிபர்களை ஆர்வத்தையும் முதலீட்டையும் ஊக்குவிக்கும் திட்டத்தைத் தான் முன்னெடுத்திருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் வியாழனன்று ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்தித்தார்.


அங்கு முதலமைச்சர் மேலும் கூறியதாவது,

கிழக்கு மாகாணத்தில் விவசாயம், மீன்பிடி, சுற்றுலாத் துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலம் பல வேலை திட்டங்களை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பளித்து தொழிலில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற ரீதில் சகல ஒத்துழைப்புக்களும் வழங்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர்  கே.பத்தமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X