2025 மே 19, திங்கட்கிழமை

'வட, கிழக்கின் பல பகுதிகளின் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளன'

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெற்ற ஆக்கிரமிப்புகள் காரணமாக வட, கிழக்கின் பல பகுதிகளின் வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மண்முனை, உலகநாச்சிபுரம் அருள்மிகு ஸ்ரீராஜகணபதி ஆலயத்தின் புகழ்பாடும் பாடல்கள் அடங்கிய இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான்கரையினையும் படுவான்கரையினையும் இணைக்கும் பகுதியின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மண்முனை உள்ளது. இந்த ஆலயம் பல ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இந்த பிரதேசமும் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாகும் என்று அவர் கூறினார்.

மேலும் இந்த பகுதியை உலகநாச்சி என்னும் சிற்றரசி ஆட்சி செய்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இப்பகுதிகளில் இருந்த பல வரலாற்று தடயங்கள் கடந்த காலத்தில் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த அவர், இவ்வாறான ஆலயங்களில் எமது வரலாற்று இடங்களை பாதுகாத்து நிற்கின்றன. அதற்காக உண்மையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை பாராட்டுகின்றோம் என்று தெரிவித்தார்.

பாடகர் பத்மஸ்ரீயினால் பாடப்பட்டு இறுவெட்டாக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய இறுவெட்டே இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X