2025 மே 19, திங்கட்கிழமை

தேசிய ஊழியர் சங்கத்தினால் புதிய நியமனங்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

12 வருடங்களின் பினனர் மட்டக்களப்பு போக்குவரத்துச் சபைக்கு தேசிய ஊழியர் சங்கத்தினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய நியமனங்கள் வெள்ளிக்கிழமை (03) வழங்கப்பட்டன. இதன்படி, மட்டக்களப்பு சாலைக்கு புதிய முகாமையாளராக எம். கிருஷ்ணராஜாவும் புதிய நிர்வாக செயற்றிட்ட உதவி முகாமையாளராக கே.சிறிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், களுவாஞ்சிகுடி சாலையின் புதிய முகாமயாளராக ந.தவேந்திரன் நியமனம் பெற்றுள்ளார்.

மேலும் மட்டு, காத்தான்குடி சாலையின் உயர் பதவிகளுக்கும் புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு கிழக்குப் பிராந்திய முகாமையாளர் சித்திக் மற்றும் ஜக்கிய தேசியக்கட்சியின் தொகுதி அமைப்பாளரான எஸ். மாசிலாமணி மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X