2025 மே 19, திங்கட்கிழமை

காத்தான்குடியில் இலவச கண் சத்திர சிகிச்சை முகாம்

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஏற்பாட்டு செய்த இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் புதன்கிழமை (01) ஆரம்பமானது.

மூன்று தினங்களாக நடைபெற்ற இந்த கண் சத்திரசிகிச்சை முகாமில் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் கண் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டு, சத்திர சிகிச்சையை  மேற்கொண்டனர்.

இந்த இலவச கண் சத்திரசிகிச்சை முகாமில், 342 பேருக்கு கண்ணில் வெண்படலம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X