Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு வாவியில் சீ பிளேன்கள் இறங்கும் போதும் ஏறும் போதும் மீன்கள் மற்றும் இறால்களின் சினை முட்டைகள் சேதமாவதனால், மீன்களின் பெருக்க வீதம் பாதிக்கப்படுவதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் நன்மை கருதி சினமன் எயார் விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இடம்பெறும் போது, நீரில் ஏற்படும் அதிர்வுகளினால் மீன்களின் சினைகள் அழிவடைவதாகத் தெரிவித்தனர்.
இது பற்றி மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேட்ட போது, நீரியல் வாழ் உயிரினங்களின் திணைக்களத்துக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் பதிலைப் பொறுத்துத்தான் தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மீன்கள் சினை முட்டைகளை கல்பாறைகள் போன்ற மறைவான இடங்களில்; இடுவதாகவும் அவற்றில் சில சினை முட்டைகளை மீன்களே உண்பதாகவும் அனுபவமிக்க மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
7 hours ago
7 hours ago
9 hours ago