2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வீடமைப்பு திட்டத்துக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

100 நாட்கள் வேலைத்திட்டத்தில், 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 1,200 பேருக்கு வீடுகளை கட்டுவதற்கான வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைக்கும் வைபவம் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (03) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தின் போது, கடந்த 35 வருடங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுக்காணி உறுதிப்பத்திரமின்றி குடியிருக்கும் 35 குடியிருப்பாளர்களுக்கான வீட்டுறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதுடன், 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு தொகுதியில் 543 பயனாளிகளுக்கு வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

இதில் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், தேசிய வீடுமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X