2025 மே 19, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றான உறுகாமம் நீர்ப்பாசனக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதியை இம்முறையும் பெற்று  சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என்று கோரி,  பாதிக்கப்பட்ட விவசாயிகள்  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் நேற்று திங்கட்கிழமை (06)   ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்டனர்.

பண்டாரியாவெளி, தளவாய், பூமாச்சோலை, கரடியனாறு, பவளவெட்டுவான் உள்ளிட்ட  பல கிராமங்களை சேர்ந்த  தமிழ், முஸ்லிம் விவசாயிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உறுகாமம் நீர்ப்பாசனக் குளத்திலிருந்து நீர்ப்பாசன வசதியை பெறுகின்ற  விவசாயிகளுக்கு, மேற்படி  குளத்திலிருந்து நீரை வழங்காமையால் சிறுபோகம்  மேற்கொள்ளமுடியாது பாதிக்கப்பட்டுள்ளதாக  ஆர்ப்பாட்டத்தில்; ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்;.

இந்த நடவடிக்கை காரணமாக பண்டாரியாவெளி, தளவாய், பூமாச்சோலை, கரடியனாறு, பவளவெட்டுவான் உள்ளிட்ட  பல கிராமங்களை சேர்ந்த சுமார்  500 விவசாயக் குடும்பங்களும் 1,500 விவசாயத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சிறுபோகம் மேற்கொள்ள முடியாதுள்ளதால்,  தொழில் வாய்ப்பை  தாங்கள் இழந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேற்படி கிராமங்களில் 1,420 ஏக்கரில் மேற்கொள்ளப்படும் சிறுபோகம்  முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்விவசாயிகள் கூறினர்.  

2014ஆம் ஆண்டு  உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 8 அடியாக இருந்தபோது, சிறுபோகச் செய்கைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இக்குளத்தின் நீர்மட்டம்  16 அடியாக நீர்மட்டம் காணப்படுகின்றபோது,  சிறுபோக செய்கைக்கான  அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கூறினர்.

ஆர்ப்பாட்ட இறுதியில்  ஜனாதிபதி, நீர்ப்பாசன அமைச்சர் ஆகியோருக்கான மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X