2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அதிகாலை விருந்தாளியால் கிராமமே அல்லோலகல்லோலம்

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 06 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கிராமத்தினுள் புகுந்த 8 அடி நீளமுடைய முதலையை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மடக்கிப் பிடித்த சம்பவமொன்று திங்கட்கிழமை (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவிற்பற்று பிரதேசத்துக்குட்பட்ட எருவில் பாரதிபுரம் கிராமத்தினுள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் 8 அடி நீளமுடைய முதலை புகுந்ததனால் கிராம மக்கள் பீதியடைந்தனர்.  

கிராமத்தினுள் புகுந்த முதலை அங்குள்ள பெரிய குழிக்குள் விழுந்து வெளியேற முடியாமலிருந்துள்ளது.

இது தொடர்பில் கிராம மக்கள், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துக்கு அறிவித்ததையடுத்து, அவ்விடத்துக்கு வருகை தந்த வன ஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நாகராசா சுரேஸ்குமார் தலைமையிலான குழுவினர் முதலையைப் மடக்கிப் பிடித்து மட்டக்களப்பு வாவியில் விட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X