Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு சுற்றாடல் தகவல் நிலையத் திறப்பு விழாவும் மாவட்ட சுற்றாடல் சட்டதிட்ட அமுலாக்கல் குழுக் கூட்டமும் நேற்று செவ்வாய்க்கிழமை (07) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தில் நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இந்த சுற்றாடல் தகவல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் எம்.உதயகுமார், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.கோகுலதீபன் தலைமையில் நடைபெற்ற சுற்றாடல் தகவல் நிலையத்திறப்பு விழாவை தொடர்ந்து, மாவட்ட சுற்றாடல் சட்டதிட்ட அமுலாக்கல் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்டத்திலுள்ள சுற்றாடல் பிரச்சினைகள், வாவிகளை பாதுகாப்பது, மணல் அகழ்வு, சுற்றாடல் பாகாப்புகள்,
கழிவுகள் அகற்றப்படுதல், சட்டவிரோத வாவி கையகப்படுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.
சுற்றாடல் தகவல் நிலையமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கரையோர வளங்கள், சுற்றாடல் தொடர்பான தகவல்கள், ஆய்வுகளுக்கான உதவிகள் எனப் பல்வேறு தகவல்களையும் வழங்கும் வகையில் இலவச வை பை தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கதாகும்.
32 minute ago
38 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
42 minute ago
9 hours ago