2025 மே 19, திங்கட்கிழமை

வெளிநாட்டு நிதித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்

Gavitha   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளிநாட்டு நிதித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (07) மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கடந்த வருட வெளிநாட்டு நிதியுதவித்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

இதில், இந்திய வீட்டுத்திட்டம், புறநெகுமத்திட்டம், மாகாண நீர் வழங்கல் திட்டம், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்றிட்டம், இபார்ட் திட்டம், மீள் எழுச்சித்திட்டம், யுனிசெப், அனர்த்தத் தணிப்பு வேலைத்திட்டம், பிரான் மற்றும் உலகவங்கி நிதித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இத்திட்டங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், எதிர்காலத்திட்டமிடல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்களும் திட்டங்களுக்குப் பொறுப்பானவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X