Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்,ஏ.எச்.ஏ. ஹூஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள வெள்ள மீட்சிக்கான செயற்றிட்டம் பற்றி அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கான அறிமுகம் செய்யும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றது.
செங்கலடியிலுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டுக்கான வெள்ள மீட்சிக்கான செயற்றிட்டத்தை பாம் பவுண்டேசன் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட முகாமையாளர்களான எஸ்.பன்னீர்ச்செல்வம், அ.சக்தி ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கான இச்செயற்றிட்டமானது செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி-04, கொம்மாதுறை வடக்கு, கொம்மாதுறை கிழக்கு, கொம்மாதுறை மேற்கு, செங்கலடி-01, செங்கலடி-02, ஐயன்கேணி, குமாரவேலியார் கிராமம், மயிலம்பாவெளி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் ஒரு கோடியே 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் மூலம் 1,000 குடும்பங்களுக்கான சுத்தமான குடிநீர் வழங்கல், சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக 1,600 குடும்பங்களுக்கான கிணறுகளை சுத்தம் செய்தல், 100 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்குதல், அனர்த்த குறைப்புக்கான வடிகான் அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் ஊடாக 09 கிராமங்களைச் சேர்ந்த 3,200 குடும்பத்தினர் பயன் அடையவுள்ளதுடன், சுமார் 12,832 பேர் நன்மையடைவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர், யு.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர், ஏறாவூர் பற்று பிரதேச உதவிச் செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமூர்த்தி முகாமையாளர், சுகாதார மேம்படுத்தல் உத்தியோகஸ்தர்கள், கிராமசேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள், கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago