Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஏப்ரல் 08 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
நஞ்சற்ற உணவுப்பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாக வாரந்தோறும் 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் (முழiஉய) கொய்க்கா நிதி அனுசரணையின் கீழ் வேல்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட இயற்கை முறை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் நஞ்சற்ற உணவுப் பொருள் பாவனையை பொதுமக்கள் மத்தியில் வலுப்படுத்தும் முகமாகவும் வாரந்தோறும் நடைபெறவுள்ள இந்த 'ஏ' ஆயசமநவ என்னும் தொனிப்பொருளிலான திட்டம், பிரதேச செயலக வளாகத்தில் இன்று முதற் கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது பிரதேச செயலக பிரிவில் பல்வேறு உற்பத்திகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள், கால் நடை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு உற்பத்தியாளர்கள் பங்குபற்றி தங்களது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி, வேல்ட் விசன் முகாமையாளர் வொனி வின்ஷன், திட்ட இணைப்பாளர் ஞா. சுரேஷ் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் நஞ்சற்ற உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
இச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமைகளில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கான அனுசரணையியை வேல்ட் விஷனின் வாகரை அலுவலகமும் வாகரைப் பிரதேச செயலகமும் இணைந்து மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago