Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
தர்ம நிதி ஒன்றுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து மோசடியாக பணம் பெற்றுவந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள குழந்தை ஒன்றுக்கு இருதய வால்வு மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்காக பரோபகாரி ஒருவரால் முகப்புத்தக விளம்பரப்படுத்தலின் மூலம் நிதி திரட்டப்பட்டது.
குறித்த முகப்புத்தகத்தில் வங்கிக்கணக்கு இலக்கம் அந்தக் கணக்கு இலக்கத்துக்கு நாளாந்தம் கொடையாளிகள் தர்மம் செய்யும் நிதி, கையிருப்புத்தொகை போன்ற விவரங்கள் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருந்தன.
இந்த வங்கிக்கணக்கு விவரங்களை கச்சிதமாக பயன்படுத்தி சந்தேக நபர், அந்த வங்கிக் கணக்கிலிருந்து இரண்டு இலட்சத்து ஐயாயிரத்து ஐம்பது ரூபாய் பணத்தை தனது நண்பர்கள் இருவரின் கணக்குக்கு மாற்றி பணத்தை பெற்றுள்ளான்.
இது தொடர்பாக விசாரணை செய்த ஏறாவூர் பொலிஸார் துரிதமாகச் செயற்பட்டு குறித்த வங்கி அதிகாரிகளின் பூரண ஒத்துழைப்புடன், 19 வயதான சந்தேக நபரை நேற்று புதன்கிழமை கைதுசெய்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில், சந்தேக நபரை 14 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் என்.எம்.அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் 31ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 6ஆம் திகதி வரை குறித்த வங்கிக்கணக்கிலிருந்து வௌ;;வேறு தொகைகளில் இந்தப் பணத்தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago