2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெருகல் படுகொலை நினைவு தினம்

Gavitha   / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் வருடா வருடம் நினைவு கூறப்பட்டு வரும் வெருகல் படுகொலை நினைவு தினம் நாளை வெள்ளிக்கிழமை (10) பிற்பகல் 4.30 மணிக்கு, மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை மக்கள் பூங்காவில், கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

2004ஆம் வருடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கெதிராக, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி அதிகாலை வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பினால் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது.

207க்கும் மேற்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆண் பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதில் உயிரிழந்தவர்களின் நினைவான இந்த நினைவு தின நிகழ்வில்,  கட்சித் தலைவர் சி.சந்திரகாந்தனின் வெருகல் படுகொலை நினைவுப் பேருரையும் உயிர் நீத்தவர்களின் ஞாபகார்த்தமாகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காக வெருகலம்பதி ஆலயத்தில் விஷேட பூசையும் அன்னதான நிகழ்வும் ஒளித்தீபம் ஏற்றுதலும் நடைபெறவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X