Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே நியாயமான முறையில் நியமிக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிலவும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளையிடம் இன்று வெள்ளிக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தற்போது நிலவுகின்ற ஒரு விடயமாக எதிர்க்கட்சித் தலைவராக யார் வரவேண்டும் என்பதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்பிலேயே பேசப்படுகின்றது. இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய அந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே வழங்க வேண்டியிருக்கின்ற இந்த வேளையில், இந்த நாட்டின் பெரும்பான்;மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அதை மறுத்து வருகின்றனர்.
முன்னாள் தலைவர் அமரர் அமிர்தலிங்கம் 1977ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக இலங்கை நாடாளுமன்றத்தில்; திகழ்ந்ததை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். அதற்கு மேலாக எமது நாடு முன்னேற வேண்டுமாயின் கடந்தகால கசப்புணர்வுகள் அனைத்தையும் மறப்போம். மன்னிப்போம். இது தொடர்பில் அயல் நாடான இந்தியாவை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எத்தனை கோடி மனிதர்கள் இந்தியாவில் வாழ்கின்றார்கள். எத்தனை சமயங்கள்; அங்கே இருக்கின்றன. எத்தனை மொழி பேசுகின்றார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் இந்தியன் என்ற உணர்வோடு வாழ்கின்றார்கள். எமது நாட்டுக்கு மட்டுமல்லாது, உலக நாட்டுக்கும் முன்னுதாரணமாக அனைவரும் பாராட்டத்தக்க வகையில் திகழ்கின்றது. ஆனால், எமது நாட்டில் பிரிவினைவாதம் பேசிப்பேசியே எமது நாடு இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டது. இல்லது போனால் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளை விட ஒரு முன்னேறிய நாடாக எமது இலங்கை மறுமலர்ச்சி அடைந்திருக்கும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago