2025 ஜூலை 17, வியாழக்கிழமை

காத்தான்குடி நகர அபிருத்திக்கு வரைவுத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்  

மட்டக்களப்பு, காத்தான்குடி நகர அபிருத்திக்கு வரைவுத்திட்டம் தயாரிப்பதற்கும் அபிவிருத்தி செய்யவேண்டிய இடங்களை பார்வையிடுவதற்குமாக கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபீஸ் நஸீர் அஹமட் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை காத்தான்குடிக்கு விஜயம் செய்தனர்.

அரசாங்கத்தின் 100 நாள் துரித வேலைத்திட்டத்தின் கீழ்  நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும்  வடிகாலைமைப்புச்சபை  அமைச்சர் ரவூப் ஹக்கீமின்  பணிப்புரைக்கு அமைவாக காத்தான்குடி நகர அபிவிருத்திக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதான  பஸ் தரிப்பு நிலையம், கடற்கரை அழகுபடுத்தல், வாவிக்கரையோரப்  பூங்கா அமைத்தல், சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கென தனியான ஓய்விடப் பூங்கா அமைத்தல், பூநொச்சிமுனையில் நீர்ப் பூங்கா அமைத்தல், மழை நீர் தேங்கி நிற்காவண்ணம் வடிகான்களை அமைத்தல், பொது மைதானம் போன்ற அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இடங்களை குழுவினர் பார்வையிட்டனர்.

மேற்குறித்த வேலைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபையினரை கிழக்கு மாகாண முதலமைச்சர்  கேட்டுக்கொண்டார்.

காத்தான்குடி  அபிவிருத்தி சம்பந்தமான விஜயத்தின்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், அலி ஸாஹீர் மௌலானா, நகர அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளர் யூ.எல்.எம்.எல்.முபீன், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊர் அபிவிருத்தி என்று வரும்போது  கட்சி பேதமின்றி சகலரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X