Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் திரிய சவிய கடன் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் வைபவ ரீதியாக நேற்று(10.4.2015) வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.குணரட்ன, வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச செயலக தலைமையக முகாமையாளர் திருமதி பாத்தும்மா பரீட், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் இ.குணரட்னம் மற்றும் அதன் வலய முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆர்.சுந்தரராஜன் உட்பட வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்கள் பயணாளிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 குடும்பங்களுக்கு திரிய சவிய எனப்படும் கடன் வழங்கப்பட்டு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சில குடுமு;பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் இன்னும் சில குடும்பங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் மேலும் சில குடுமு;பங்களுக்கும் அதைவிடவும் குறைந்த தொகையும் இதன் போது வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கல்விப்பொதுத்தராதரம் வகுப்பில் கற்கும் 35 மாணவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கான சிப்தொர எனப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago