2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கடன் திட்ட வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

George   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
 
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில், கடன்திட்ட அடிப்படையிலான வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வெள்ளிக்கிழமை(10) பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.
 
வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட காயாங்கேணி கிராம சேவகர் பிரிவில், வன்னிச்சி நகரில் கடன் அடிப்படையில் 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.
 
100 நாட்கள் துரித அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக சமூர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக கிராமங்களை அபிவிருத்தி செய்யும்  நோக்குடன் இது அமுல்படுத்தப்படுகின்றது.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ரீ.கெங்காதரன், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் என். கருணைநாதன், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பிரதேச சபை அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X