2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'கனவு காண்பதற்கல்ல வழிகாட்டுவதுக்கு'

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 12 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இளைஞர் கழகங்களை கட்டியெழுப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

'கனவு காண்பதற்கல்ல வழிகாட்டுவதுக்கு' என்னும் திட்டத்தின் கீழ் இந்த மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 388 இளைஞர்கழகங்களையும் உள்ளடக்கியதான இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் விசேட செயலமர்வு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் சனிக்கிழமை (11) நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எம்.எல்.ஏ.எம்.நைரூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய சம்மேளனத்தின் முன்னாள் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் கே.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் தலைவர் வி.வேணுசாந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள இளைஞர் கழகங்கள் மற்றும் பிரதேச சம்மேளனங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுவரும் நிலையில் மாவட்ட சம்மேளனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X