Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தருவதற்கு பல முரண்பட்ட கருத்துக்கள் வந்த வண்ணமுள்ளன என்று கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக இன்று வியாழக்கிழமை (16) கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்குரிய தீர்வு என்பது வழுக்கு மரத்தில் ஏறுவது போன்று இன்னும் தீர்வு எட்டப்படாமலுள்ளது. இனப் பிரச்சினைக்குரிய தீர்வுக்காக வேண்டி தமிழ் மக்கள் பல இழப்புக்களை தொடர்ந்தும் இழந்துகொண்டு இருக்கின்றார்களே தவிர, இன்னும் எதுவித தீர்வும் எட்டப்படவில்லை.
கடந்த 65 வருடகாலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பணியும் ஊர்வதும் தாழ்வதுமாக சென்று கொண்டிருக்கின்றது. ஆனாலும், தொடர்ச்சியாக தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அரசியல் பணியை மேற்கொள்ள வேண்டுமாயின், எமது தமிழ் மக்கள் தொடர்ந்து தமிழ்த் தேசியத்தின் பால் அணிதிரள வேண்டும். அவ்வாறு அணிதிரளும் பட்சத்தில் அது தமிழர்களுக்குரிய தீர்வுக்கு இட்டுச் செல்லும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய 4 பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளே 225 உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர். இந்த 4 கட்சிகளின் தலைவர்களில் ஒருவரே எதிர்க்கட்சித் தலைவராக வரமுடியும். அந்த வகையில், தற்போதைய நிலைமையின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராக வரக்கூடிய சந்தர்ப்பம் இருந்தும், தமிழர் என்ற காரணத்தினால் அது ஒதுக்கப்பட்டு வருகின்றது. நாடாளுமன்ற சிறப்புரிமையையும் இனவாதம் என்கின்ற சக்தி தடுக்கின்றது. நாடாளுமன்ற சபாநாயகருக்குள்ளும் இனவாதம் புகுந்துள்ளது. அதனால், எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அவரால் அறிவிக்க முடியாமலுள்ளது. இச்செயற்பாடுகள் நாடாளுமன்ற நடைமுறைக்கு இல்லாத விடயங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. எனவே இவற்றை தமிழ் மக்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துச் செயற்பட வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago