Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த அரசாங்கத்தின் உருவாக்கத்துக்குப் பங்காளிகளான மக்களுக்கு புதிய அரசாங்கத்தின் நன்மைகள் வரத்தொடங்கியுள்ளதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இசை, நடனக்கல்லூரியின் இரண்டாம் குறுக்கு வீதியினை கொங்கிறீட் இட்டு வீதியினை செப்பனிடும் நடவடிக்கையை ஆரம்பித்;த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி,
அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் 15,000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைய வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சால் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் எந்த வேலைத்திட்டமாக இருந்தாலும் அதன் நன்மையை மட்டக்களப்பு மக்களும் அடைவர்.
வறுமைக் கோட்டின் கீழுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கையை எமது அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
வீடற்ற மக்களுக்கு வீடொன்றை கட்டுவதற்காக நாம் உதவி வருகின்றோம். இதற்குப் பொறுப்பான அமைச்சர் சஜித் பிரேமதாஸ உற்சாகத்துடன் மக்களுக்காக வேலை செய்கின்றார் என அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் எனும் இந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் ஒவ்வொரு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago