Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மகாணத்தில் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் ஆயிரத்து பதினொரு (1011) ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரக் குறிப்பில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டள்ளன.
தரம் ஒன்று தொடக்கம் பதினோராம் தரம் வரையான பிரிவுகளில் ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம், சித்திரம், தகவல் தொழில்நுட்பம், இரண்டாம் மொழி சிங்களம் உள்ளிட்ட பாடங்களைப் போதிப்பதற்கான ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளதாக அமைச்சின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.
இந்த ஆசிரியர் வெற்றிடங்களுக்கேற்ப ஆங்கிலம் 200 சித்திரம் 200 இரண்டாம் மொழி சிங்களம் 200 கணிதம் 80, தகவல் தொழில்நுட்பம் 75, விஞ்ஞானம் 60 விவசாயம் 45 கீழைத்தேய சங்கீதம் 15 நாடகமும் அரங்கியலும் 20 வியாபார முகாமைத்துவம் கணக்கீடு 20 நடனம் 20 மேலைத்தேய சங்கீதம் 5, மனைப்பொருளியல் 10 வடிவமைப்பு தொழில்நுட்பம் 6 விசேட கல்வி 06 சங்கீதம் 05 பரத நாட்டியம் 5 என்றவாறு ஆளணி வெற்றிடங்கள் காணப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
34 minute ago
38 minute ago
40 minute ago